”மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதை தடுப்பதற்கு அரசு இதை விரைவாக செய்ய வேண்டும்” - ராமதாஸ்!

”மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதை தடுப்பதற்கு அரசு இதை விரைவாக செய்ய வேண்டும்” - ராமதாஸ்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதைத் தடுக்க மருத்துவப் பேராசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள  பேராசிரியர்களை பணி நிரவல் செய்தாலும் கூட, 10 கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் வருகைப் பதிவேடு கட்டுப்பாட்டை நிறைவு செய்ய இயலாமல் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர்க்க உயர் நீதிமன்றம் விதித்த மருத்துவப் பேராசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான தடையை நீக்கி பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com