ஊடகங்களே அரசுக்கும் மக்களுக்கும் பாலம்...! அமைச்சர் மெய்யநாதன் பேச்சு...!!

ஊடகங்களே அரசுக்கும் மக்களுக்கும் பாலம்...! அமைச்சர் மெய்யநாதன் பேச்சு...!!
Published on
Updated on
1 min read

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களே அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், ஆலங்குடி பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் நடத்தப்பட்ட உலக பத்திரிகை சுதந்திர தின விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.  அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், பொதுமக்களின் கோரிக்கைகளை அரசுக்கும், அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் பாலமாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் விளங்குகிறது .

நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், அடித்தட்டு மக்களின் கோரிக்கைகள், பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவது பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களே. பத்திரிகை செய்தி மூலமாகவே பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதற்காக தொடங்கப்பட்டது தான் பத்திரிகை சுதந்திர தின விழா. மேலும் இவ்விழாவை 12 ஆண்டுகளாக ஆலங்குடியில் தொடர்ந்து நடத்துவது பாராட்டுக்குறியது என்று கூறியுள்ளார்.

இந்த விழாவில் புதுக்கோட்டை வருவாய்  கோட்டாட்சியர் முருகேசன், பயிற்சி சார் ஆட்சியர் ஜெயஸ்ரீ, ஆலங்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com