”நாடாளுமன்ற தேர்தலில் கெட்ட பெயரை தான் வாங்கி தர போகிறீர்கள்”அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மேயர்!

”நாடாளுமன்ற தேர்தலில் கெட்ட பெயரை தான் வாங்கி தர போகிறீர்கள்”அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மேயர்!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற தேர்தலில் கெட்ட பெயரை தான் வாங்கி தர போகிறீர்கள் என ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயர் உதயகுமார், அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஆவடி மாநகராட்சியில் ஆகஸ்ட் மாதத்திற்கான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்  மேயர் உதயகுமார் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே வார்டுகளில் நிலவும் குறைபாடுகளை கவுன்சிலர்கள் அடுக்கடுக்காக முன் வைத்து  குற்றம்சாட்டினர்.

அப்போது பேசிய மேயர் உதயகுமார், AE க்கள் FIELD க்கு செல்லுவதே இல்லை என்றும், தான் ஏதாவது கூறினால் கூட இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுகிறார்கள் என்று அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்து, கவுன்சிலர்கள் கூறும் அனைத்து பிரச்சினைகளும் உடனடியாக தீர்க்க வேண்டும், இதே நிலை நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் கெட்ட பெயரை தான் வாங்கி தர போகிறீர்கள் என கடுமையாக சாடினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com