ஆர்எஸ்எஸ் பக்கம் சாயும் மம்தா...!!!! நிதின் கட்காரியை ஆதரிக்கும் நோக்கமா??

ஆர்எஸ்எஸ் பக்கம் சாயும் மம்தா...!!!! நிதின் கட்காரியை ஆதரிக்கும் நோக்கமா??

மம்தா Vs பாஜக:

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த பல வருடங்களாகவே மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவிற்கும் மம்தாவிற்கும் இடையே நேரடியாகவே கடுமையான போட்டியும் மோதலும் நடைபெற்றது.  பாஜகவை 2014 பொது தேர்தலிலிருந்தே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் மம்தா.

மம்தா அரசு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அமலாக்க துறை ரெய்டும் சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டு அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.  ஊழலில் அதிகம் பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீதும் விசாரணை தொடரும் எனவும் பாஜக செய்தி தொடர்பாளர் அறிவித்ததைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி சார்பில் அமைச்சருக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

ஆர்எஸ்எஸ் ஆதரிக்கும் மம்தா:

தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வந்த மம்தா குடியரசு துணை தலைவர் தேர்தலில் நடுநிலைமையே வகித்தார். மேற்கு வங்காள தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மம்தா ”ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் இல்லை” என்று கூறியிருந்தார்.  அந்த அளவுக்கு கெட்ட அமைப்பும் இல்லை எனவும் பாஜக செய்யும் அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களும் உள்ளனர் எனவும் பேசியுள்ளார்.

மறைமுகமாக கட்காரியை ஆதரிக்கிறாரா மம்தா:

மத்திய அரசின் போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்காரி கடந்த சில நாட்களாகவே மத்திய அரசை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார்.  பிரதமர் வேட்பாளராகும் நோக்கத்திலேயே இவ்வாறு செயல்படுவதாகவும் விமர்சனம் எழுந்து வருகிறது.  மேலும் நிதின் கட்காரி ஆர்எஸ்எஸ்ஸில் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  மம்தா பானர்ஜி குறிப்பிட்ட சிலர்களில் ஒருவர் நிதின் கட்காரி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,

ஓவைசி-ஆதிர் ரஞ்சன் சௌத்ரி:

”பத்து ஆண்டுகளுக்கு முன்னரே மம்தா ஆர்எஸ்எஸ்ஸை ‘தேசபக்தர்கள்’ எனவும் அவர்கள் மம்தாவை ‘துர்க்கா’ எனவும் ஒருவரையொருவர் புகழ்ந்துள்ளனர்” என அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் ஒவைசி பதிவிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ்ஸை மம்தா பாராட்டுவது இது முதல்முறையல்ல எனவும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான கூட்டணியில் மம்தா அங்கம் வகித்துள்ளார் எனவும் காங்கிரஸின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.  மேலும் வாக்குகளைப் பெற சில நேரம் ஹிந்து நடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும் சில நேரம் முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் பேசுவார் எனவும் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறியுள்ளார்.

காங்கிரஸ்-மம்தா போட்டி:

இந்திய தேசிய கங்கிரஸிலிருந்து பிரிந்து உருவானதே திரிணாமூல் காங்கிரஸ்.  இரு கட்சியினரிடையே மோதல் போக்கு எதுவும் நிலவவில்லை எனினும் சுமூகமான உறவும் இல்லை என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  2024ல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மையமாக எதிகட்சிகள் கூட்டணி அமையப் வேண்டும் நிலைக்கு எதிராக மாநில கட்சிகளுடான எதிர்கட்சிகளின் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் மம்தா.

இதையும் படிக்க:  கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு விதிமுறை மீறல்..!!!!