கோவை மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானை மீண்டும் வால்பாறை பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் சுமார் 5க்கும் மேற்பட்டவர்களை கொன்று அட்டகாசம் செய்து வந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய மக்னா யானை ஆனைமலை பகுதியில் அட்டகாசம் செய்து வந்தது. மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்டது . மக்னா யானை மானாம் பள்ளியில் இருந்து வெளியேறி ஆனைமலை பகுதியில் திரும்ப முகாம் இட்டு விவசாயிகளின் பயிர்கள் வாழை தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டமும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து இரவோடு இரவாக வால்பாறையை அடுத்த சின்னக்கல்லார் தேயிலைத் தோட்ட பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர்.
இதையும் படிக்க || தங்களை புறக்கணிப்பதாக, அமைச்சர் மீது அட்டவணைப் பிரிவினர் புகார்!!