டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக்கின் ரீல்ஸ் போன்ற குறுகிய வடிவ வீடியோ சேவைகள் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளின் போட்டிக்கு மத்தியில் யூடியூப்பின் விளம்பர வருவாய் தொடர்ந்து இரண்டாவது காலாண்டில் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சூசன் பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுக்குறித்து சூசன் கூறுகையில், “என் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கப் போகிறேன். எனது குடும்பம், உடல்நலம் மற்றும் தனிப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஒரு புதிய வேலையைத் தொடங்குவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
புதிய சவால்:
புதிதாக பதவியேற்றுள்ள மோகன் இதற்கு முன்னர் யூடியூப் தளத்தில் பணியாற்றியிருப்பினும் தற்போது அவர் முன்னுள்ள போட்டிகளும் சவால்களும் மிகப் பெரியது. அவற்றைக் கடந்து அவர் தனது திறமையை வெளிக்காட்டும் கட்டாயத்தில் உள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-நப்பசலையார்