மீண்டும் மாஸ்க் அணியலாம்....பிரதமரின் கொரோனா அறிவுரைகள்!!!

மீண்டும் மாஸ்க் அணியலாம்....பிரதமரின் கொரோனா அறிவுரைகள்!!!

நாட்டின் நலன்கருதி பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.  ஒமிக்ரான் பி.எப்.7 என பெயரிடப்பட்டுள்ள இந்த தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.  பி.எப்.7 மற்றும் பி.எப்.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் பி.எப்.7 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

இந்நிலையில், சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.  சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர்  பங்கேற்ற இந்த கூட்டத்தில், கொரோனாவின் தற்போதைய நிலை, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

ஆலோசனையின் போது, மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் படுக்கைகள் போதுமான அளவு இருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மருத்துவமனைகள் தயார் நிலையில் வைத்திப்பதை அனைத்து மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், நாட்டின் நலன்கருதி பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் அவ்வப்போது கைகளை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  நீ நிலம் தரலானா நான் தண்ணீர் தரமாட்டேன்...ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் முதலமைச்சர்கள்...காரணம் என்ன?!!!