இந்த ஒருநாள் மட்டுமன்றி அனுதினமும் போற்றி பாராட்டுவோம்...!!

இந்த ஒருநாள் மட்டுமன்றி அனுதினமும் போற்றி பாராட்டுவோம்...!!

உலக பெண்கள் தினம் நாளை உலகம் கொண்டாடப்படவுள்ளது.  இந்நிலையில் உலகமெங்கிலும் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமாரும் அவருடைய வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

அனுதினமும்:

அன்பை பகிரும் அன்னையாக, சகோதரியாக, மகளாக,தோழியாக குடும்பத்திலும், சமுதாயத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அன்றாட வாழ்வின் அங்கமாக, திகழ்பவர்கள் பெண்கள்.  அத்தகைய பெண்களின் தியாகத்தையும், சமுதாய வளர்ச்சிக்கான பங்களிப்பையும் போற்றி கொண்டாடுவதற்கான நாளாக இந்த இனிய சர்வதேச மகளிர் தினம் அமைந்துள்ளது.  பெண்களுக்கானசமத்துவமும், உரிமையையும் வலியுறுத்தும் தினத்தில் பெண்களை இந்த ஒருநாள் மட்டுமன்றி அனுதினமும் போற்றி பாராட்டுவோம்.  

உயரும் பெண்சக்தி:

குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கு எதிரானவன் கொடுமைகளுக்கு மூலக்காரணமாக அமைந்துள்ள மது மற்றும் போதைபொருட்கள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க இந்நாளில் உறுதியேற்போம். பழமைவாதத்திலிருந்து விடுபட்டு, எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப கல்வியில் சிறந்து விளங்கி, வேலைவாய்ப்பு, அரசியல், நீதி, நிர்வாகம், ஊடகம், விண்வெளி, விளையாட்டு, கலை, இலக்கியம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் திறமையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.  நாட்டின் ஆட்சியை நிர்ணயிக்கும் அளவிற்கு பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையும், சக்தியும் உயர்ந்துவருகிறது.  

சகோதரிகள்:

பாதுகாப்பு, குடும்ப உறவுகளுக்கிடையே சிக்கல்கள், பொருளாதாரநிலை, வீட்டுபணிகள் என எத்தகைய சவால்கள் இருந்தாலும், மனவலிமையுடன் அவற்றை கடந்து, குடும்பவளர்ச்சிக்கும், நாட்டு வளர்ச்சிக்கும் முக்கிய பெரும்பங்காற்றி வரும் மகளிராகிய சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்  சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதையும் படிக்க: