சென்னை மெட்ரோ ரயிலில் குறைந்த பயணிகள் எண்ணிக்கை..!!

சென்னை மெட்ரோ ரயிலில் குறைந்த பயணிகள் எண்ணிக்கை..!!

ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதம் 23,8,176 பேர் குறைவான அளவே மெட்ரோவை பயணிகள் பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்பதால் ஜனவரி மாதத்தை விட இந்த மாதம் குறைவான அளவில் பயணம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நடப்பு ஆண்டு கடந்த மாதம் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகள் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளதாகவும் இந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்தை விட சற்று குறைவாகவே உள்ளது என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேலும், 01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் எனவும் 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில்பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Cand) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!!