பூரி கேட்டு தொந்தரவு செய்த கணவர்... ஆத்திரமடைந்த மனைவி செய்த கொடூரச் செயல்!!

பூரி கேட்டு தொந்தரவு செய்த கணவர்... ஆத்திரமடைந்த மனைவி செய்த கொடூரச் செயல்!!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பொருளூர் ஊராட்சி குப்பாயிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. விவசாயியான இவருக்கு பொன்னாத்தாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 

சிறு வயதில் இருந்தே சின்ன சின்ன காரணங்களுக்கெல்லாம் கோபப்படும் செல்லமுத்து மனைவியிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் இரவில் வீட்டில் இருந்த செல்லமுத்து மனைவியிடம் பூரி சாப்பிடுவதற்கு ஆசையாக உள்ளது என கூறியிருந்தார். 

ஆனால் பொன்னாத்தாளோ, கேட்ட நேரத்துக்கெல்லாம் எதையும் செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லமுத்து இப்போ பூரி போட்டு தர முடியுமா? முடியாதா என கத்திக் கூப்பாடு போட்டார். 

அப்போது விரக்தியின் உச்சத்துக்கே சென்ற பொன்னாத்தாள் சரி என கூறி விட்டு பூரி போடுவதற்காக எண்ணெயை சூடுபடுத்தினார். தனக்கு விரைவில் சாப்பாடு கிடைக்கப் போகிறது என செல்லமுத்து காத்திருந்தபோது, கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து கணவன் உடலில் ஊற்றியுள்ளார் பொன்னாத்தாள். 

இதையடுத்து செல்லமுத்து அலறித் துடித்ததையடுத்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை             மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

இந்த நிலையில் 27-ம் தேதியன்று அனுமதிக்கப்பட்ட செல்லமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த கள்ளிமந்தையம் போலீசார் செல்லமுத்து சாவுக்கு காரணமான பொன்னாத்தாளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com