தென்காசி கிருத்திகா படேல் கடத்தப்பட்ட விவகாரத்தில் அவரின் தாய், தந்தை, இரண்டாம் கணவரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தேவைப்பட்டால் மூவரையும் கைது செய்து விசாரிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
விருப்பத்தின் அடிப்படையில்:
6 ஆண்டுகள் காதலித்து வந்த வினித் - கிருத்திகா படேல் கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில், வினித் இல்லாத நேரத்தில் வீடுபுகுந்து கிருத்திகாவை அவரது குடும்பத்தினர் கடத்திச் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து கிருத்திகா 2ம் திருமணம் செய்த நிலையில், விருப்பத்தின் பெயரிலேயே சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
ஆணவக்கொலை:
இந்நிலையில் வழக்கில் முன்ஜாமீன் கோரிய கிருத்திகா குடும்பத்தினரின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வினித்தின் குடும்பத்தினரால் கடத்தப்பட வாய்ப்புள்ளதால், கிருத்திகாவை ஆன்லைனில் ஆஜராக அனுமதிகோரி அவரின் வழக்கறிஞர் வாதாடினார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், கிருத்திகாவின் தாய், தந்தை தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், ஆணவக்கொலை செய்வதற்காக கிருத்திகா குஜராத்தில் வைக்கப்பட்டுள்ளாரா என கேள்வியெழுப்பினர்.
வழக்கின் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, தாய், தந்தை, 2ம் கணவரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, தேவைப்பட்டால் அவர்களை கைது செய்து விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க: நாளை விசாரணைக்கு வரவுள்ள ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’...!!