எந்த ஆவணங்களும் இல்லாமல் அரசு நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா வழங்கிய கோட்டாட்சியர்..!

எந்த ஆவணங்களும் இல்லாமல் அரசு  நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா வழங்கிய கோட்டாட்சியர்..!

எந்த ஆவணங்களும் இல்லாமல் அரசு தரிசு நிலத்தை தனிநபர்களுக்கு பட்டா போட்டு வழங்கிய கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரை செப்டம்பர் 26ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம், சிலம்பநாதன்பேட்டை ஊராட்சியில், அரசிற்கு சொந்தமான  186 ஏக்கர் தரிசு  நிலத்தை, அரசின் ஒப்புதலின்றி நஞ்சை நிலமாக வகை மாற்றம் செய்ததுடன், எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களுக்கு  பட்டா பதிவு செய்து கொடுத்துள்ளதாக கூறி,  சிலம்பநாதன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சிங்காரவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இந்த பட்டாக்களை ரத்து செய்யக் கோரியும், விரிவான விசாரணை நடத்தக் கோரியும், அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி, எஸ். எம். சுப்பிரமணியம், மனுதாரர் கூறிம் குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை என்பதால், அந்த நிலத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நில நிர்வாக துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும்,  பட்டா வழங்கி உத்தரவு பிறப்பித்த கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்  செப்டம்பர் 26ஆம் தேதி  நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.