காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியை சந்தித்திப் பேசினார்.
காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடக்கோரி, கர்நாடக அரசி, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகின்றது. ஆனால், கோரிக்கையை மறுத்து, தண்ணீரை திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில், தமிழ் நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பி குழு டெல்லி சென்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியில் இருந்து தமிழ் நாட்டிற்கு நீரை திறந்து விட வலியுரித்தனர்.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான குழுவினர், இன்று டெல்லியில் முகாமிட்டு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனிடையே, அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார், அமைச்சர் ஜெயசந்திரா, எம்.பிக்கள் டி.கே.சுரேஷ், சந்திரசேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியை சந்தித்துப் பேசியுள்ளனர்.
கர்நாடகக் குழு பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்கவும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க || நடிகா் விஷால் நோில் ஆஜராக உத்தரவு!!