கர்நாடக மாநில தேர்தலையொட்டி தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் இம்மாதம் 10 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக 2,040 பறக்கும் படைகள்,2,605 கண்காணிப்பு குழுக்கள் 631 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 225 கணக்கியல் குழுக்கள் என பல்வேறு குழுக்களை கர்நாடக தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு -கர்நாடக எல்லைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் இந்திய தேர்தல் ஆணையர் ராஜூவ் குமாருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்று வரும் ஆலோசனையில் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க:உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கும் கர்நாடக அதிமுக...!