கர்நாடக சட்டசபை தேர்தல்...! பிரதமர் மோடி பத்து நாட்கள் பிரசாரம்...!!

கர்நாடக சட்டசபை தேர்தல்...! பிரதமர் மோடி பத்து நாட்கள் பிரசாரம்...!!
Published on
Updated on
1 min read

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் மோடி பத்து நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி 20ம் தேதி நாள். தற்போது மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், களத்தில் யார் உள்ளனர் என்பது தெரியவரும். அதன் பிறகு தேர்தல் களத்தில் பரபரப்பு அதிகரிக்கும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி இந்த ஆண்டில் மட்டும்  7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒருமுறை வந்த மோடி, பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா சென்று வன விலங்குகளை பார்த்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வருகிற மே 1-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 நாட்கள் கர்நாடகம் முழுவதும் பிரசாரம் செய்யும் அவர், சுமார் 30 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 பிரசார கூட்டங்களில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com