குடியரசு தலைவரின் ஜி 20 விருந்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அழைப்பு இல்லை!!

குடியரசு தலைவரின் ஜி 20 விருந்தில், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அழைப்பு இல்லை!!

குடியரசுத் தலைவரின் ஜி20 விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

உலகத்தலைவர்கள் பங்கேற்புடன் 9, 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 மாநாடு கூடுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து மாநில முதலமைச்சர்கள் - அமைச்சர்கள் பங்கேற்புடன் நாளை பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விருந்தளிக்கிறார். 

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க || "பாஜகவிற்கு தைரியம் இருந்தால் இந்தியாவின் பெயரை மாற்றட்டும்" உமர் அப்துல்லா சவால்!!