மறைந்தும் வாழும் தென்னிந்திய பவர் ஸ்டார்...!!!!

மறைந்தும் வாழும் தென்னிந்திய பவர் ஸ்டார்...!!!!
Published on
Updated on
2 min read

மறைந்த தென்னிந்திய நடிகரான புனித் ராஜ்குமாரின் ரசிகர்களின் எண்ணிக்கை அவர் இறந்த பிறகும் குறைவதாக இல்லை. சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களின் இதயங்களை ஆளும் அதே வேளையில், அவரது ரசிகர்களும் அவரது ஹீரோவுக்கு வெவ்வேறு வழிகளில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

சமீபத்தில் புனித் ராஜ்குமார் பெயரில் செயற்கைக்கோள் ஏவப் போவதாக பெங்களூரு பள்ளிக் குழந்தைகள் அறிவித்திருந்த நிலையில், கணேஷ் உற்சவத்தின் வண்ணமயமான நிகழ்ச்சியின் போது, ​​அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. கணேஷ் உற்சவத்தின் போது, ​​நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது, அதன் படங்கள் சமூக ஊடகங்களில் பெருகி  வைரலாகி வருகின்றன. 

பவர் ஸ்டார்:

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இப்போது இல்லை, ஆனால் அவரது நட்சத்திர அந்தஸ்து இன்றும் அப்படியே உள்ளது. இந்த விநாயக சதுர்த்தி, சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் அவரது நினைவை உயிர்ப்புடன் வைத்திருக்க ஒரு சிறப்பு வழியைக் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில், பெங்களூரில் வசிக்கும் பலர் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சிலைகளுடன் விநாயகர் சிலைகளை வாங்குவதைக் காண முடிந்தது. புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார், அவரது ரசிகர்களால் முழு மனதுடன் நேசிக்கப்படுகிறார். கன்னட படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்பட்டார்.

கௌரவ டாக்டர்:

புனித் ராஜ்குமார் 'அப்பு' போன்ற படங்களின் நட்சத்திரமாக மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பாடகராகவும் இருந்தார். புனித் ராஜ்குமாருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் மைசூர் பல்கலைக்கழகம் மரணத்திற்குப் பின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. புனித் மனைவி அஸ்வினி தனது மறைந்த கணவர் சார்பாக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதம், கன்னட ராஜ்யோத்சவ விழாவில், நவம்பர் 1 ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

சேவையாளரான புனித்:

புனித் ராஜ்குமார் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சமூக சேவகராகவும் இருந்தார். தொண்டு மற்றும் சமூக சேவையில் புனித் ராஜ்குமாருடன் யாரும் போட்டி போட முடியாது. 45 இலவசப் பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள் மற்றும் 19 கௌசாலாக்களை அவர் உயிருடன் இருந்தபோது தொடங்கினார். இவையனைத்தும் அவரது மறைவுக்குப் பிறகும் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கின்றன. இது தவிர, 1800 அனாதை மகள்களின் உயர் கல்விப் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com