
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்குச் சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். பதவியேற்றது முதல் எல்லைக்கு செல்லாத அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்குச் சென்றுள்ளார். அங்கு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல் தொடர்பான விவாதங்களின் மையமான டெக்சாஸின் எல் பாசோ பகுதிக்கு அவர் சென்று பார்வையிட்டார்.
மெக்சிகோ மற்றும் கனடாவின் தலைவர்களுடனான உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மெக்சிகோ நகரத்திற்கு ஜோ பைடன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஆடையில் சிறுநீர் கழித்த அதிபரும் கைது செய்யப்பட்ட ஆறு பேரும்....