சென்னை ராயபுரத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கிய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறும்... தமிழ்நாட்டில் ஆளும் கட்சி எதிரான அலை வீசி வருகிறது. ஒரு தொகுதியில் பணம் கொடுத்து வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் திமுக மண்ணைக்கவும் வகையில் வெற்றியை அதிமுகவிற்கு மக்கள் அளிப்பார்கள் என்றார். பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை, இன்று இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி இருக்கிறார். அதற்கான பணிகள் தான் தற்பொழுது கட்சியில் தொடங்கி இருக்கிறது. உரிய நேரத்தில் நல்ல முடிவை தலைமை கழகம் அறிவிப்பு வெளியிடும் எனறார்.
பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் நடமாட்டம் இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆக நடமாடும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் எனவும், தமிழக முதலமைச்சர் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார், அவருக்கு கட்சியும் இல்லை ஆட்சியும் இல்லை என தெரிவித்தார்.
ரவுடிகளின் சாம்ராஜ்யமாக தமிழகம்
திமுக கட்சியில் இருக்கும் எம்.பி க்கு பாதுகாப்பு இல்லை அப்படி இருக்கும் பொழுது அடிப்படைத் தொண்டனுக்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்கும். ரவுடிகளின் சாம்ராஜ்யமாக தமிழகம் உள்ளது. கட்சி தலைவர் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்பது தான் இதன் மூலம் தெரிகிறது. இதுதான் திராவிட மாடலின் இலட்சணமா... கட்சியும் ஆட்சியும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என தெரிவித்தார். மேலும், கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு அப்பாவும், மகனும் சுற்றி வருகிறார்கள். முதலமைச்சரும் உதயநிதியும் கட்டிடத்தை திறக்கும் வேலையையும், scene போடும் அரசாங்கமாக தான் இருந்து கொண்டிருக்கிறது என்றார்.
நீட் தேர்வின் ரகசியம்
தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வின் ரகசியம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறினார்கள் ஆனால் தற்போது வரையிலும் நீட் தேர்வை ஒழிக்கவில்லை. நீட் தேர்வு ரகசியம் என்று உதயநிதி ஸ்டாலின் மக்களுக்கு அல்வா கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது அவர் ஒரு கத்துக்குட்டி என் தெரிவித்தார். மேலும், 17 வருடம் மத்தியில் ஆட்சியில் இருந்தும் தமிழகத்துக்கு திமுக எதுவும் செய்யவில்லை, தமிழக உரிமையை நிலைநாட்ட தவறிவிட்டனர் என கூறினார்.
உதயநிதிக்கு புகழ் பாடுவதுதான் அன்பில் மகேஷ் வேலை
12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை, பள்ளிக்கல்வித்துறை இன்று சீரழிந்துள்ளது.. பள்ளி கல்வித்துறை அமைச்சர் உதயநிதிக்கு புகழ் பாடுவது தான் முழு வேலையாக செய்து வருகிறார் அவர் துறையின் மீது கவனம் செலுத்தி இருந்தால் அனைத்து மாணவர்களும் தேர் எழுதி இருப்பார்கள் என்றார். தமிழ் தமிழ் என்று சொல்லிவரும் திமுக தமிழ் மொழி பாடத் தேர்வை எழுதாத மாணவர்களின் நிலை குறித்து என்ன விளக்கம் அளிக்கப்போகிறது என கூறினார்.
தொண்டர்களின் உணர்வை பாஜக கட்டுப்படுத்த தவறிவிட்டது. தவறு செய்த கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தற்போது மீண்டும் இணைத்துள்ள பாஜகவின் செயல் குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டிவிட்டும் செயல் என்றார். எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மை எரித்ததால் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி மீண்டும் கட்சியில் இணைத்ததற்கு கண்டனம், நடவடிக்கை வெறும் கண் துடைப்பா ?
தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டியது தலைவரின் பொறுப்பு. அதை அவர்கள் செய்ய வேண்டும். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டக்கூடாது. இது போன்ற செயல் எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல ஆகிடும் என தெரிவித்தார்.