சென்னை புத்தககண்காட்சியில் ஜெய் பீம் புத்தகம் - நடிகர் சூர்யா

சென்னை புத்தககண்காட்சியில்  ஜெய் பீம் புத்தகம்  - நடிகர் சூர்யா
Published on
Updated on
2 min read


ஜெய் பீம் திரைப்படம் 

ராஜாக்கண்ணு, செங்கேணி என்ற பழங்குடியின தம்பதிகள், உயர் சாதியினரால் ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதை படம் எடுத்துக் காட்டுகிறது. செய்யாத குற்றத்திற்காக ராஜாக்கண்ணு, கைது செய்யப்படுவதிலிருந்து திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை பிரதிபலித்திருந்தது.


ஜெய்பீம் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உணர்வு. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. ‘ஜெய்பீம்’ படத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கிடைத்த கற்பனைக்கு எட்டாத வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல்  கோவை சர்வதேச திரைப்பட விழாவில் பேசியிருந்தார்.

 அம்பேத்கர் சுருக்கப்படுகிறார்

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பிரச்சினை என்பதால், அது அனைவரையும் இணைத்துள்ளது. அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக சுருக்கப்பட்டுள்ளார்.ஜெய்பீம்’ படத்திற்காக சாதிப் பாகுபாடு, சட்ட அமலாக்கம் மற்றும் நீதிபரிபாலனத்தில் உள்ள குறைகள் பற்றி பல நூற்றுக்கணக்கான கதைகளை கேட்டேன். அநீதிக்கு எதிராக போராட அரசியல் சாசனம் தான் உண்மையான ஆயுதம். அதையே தான் படத்தில் சித்தரித்துள்ளேன்.

கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் குரலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான வாழ்க்கையில், ஹீரோக்களுக்கு இடமில்லை. கல்வி மூலம் ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக உயர்த்திக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது தான், என்னுடைய படம் தனது உண்மையான இலக்கை அடையும்” என்று அவர் தெரிவித்தார். 

சூர்யா அட்டை படம் வெளியீடு

ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன், படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ்.  @arunchol – #2DEntertainment இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவரும் ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com