சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் "மரபுசார் இடங்களின் நண்பர்கள்" என்ற அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான மரபுசார் இடங்களின் நண்பர்கள் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை முரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தவர்,
தமிழ் பண்பாடு கீழடி
தமிழ் பண்பாடு, மரபுகள் அனைத்துமே கொண்டாடப்பட வேண்டியது தான் அதில் பெரிது சிறிது என்பதை விட தமிழர்களின் தொன்மையை கொண்டாட வேண்டும். வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் அகழாய்வுத்துறை சங்க இலக்கியம் நம் கையில் இருக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லூர் அங்கு கிடைத்திருக்கும் செய்திகள் எல்லாம் முக்கியமானவை என்றார். தமிழ்நாட்டில் மரபு சார்ந்த விஷயங்களில் மதுரை, சென்னை நடப்பவை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அமைப்பு சார்பில் எனக்கு விருது அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
தமிழர்களின் தொன்மையை விளக்குவதற்கு தமிழக அரசின் முயற்சிகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு தான் அகழ்வாராய்ச்சி தொடங்கியது, அதிலும் அதைப்பற்றி செய்தி 2015, 2016 ஆம் ஆண்டு வெளியே வந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்குள் 8 கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து அதிலும் மாநில அரசு ஒன்றிய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறை முன்னெடுத்து 26 மொழிகளில் அறிக்கை வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், வெளிநாட்டில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் இருந்து விலங்குகளின் எலும்பு அதற்குரிய சோதனைக் களம், மண்பாண்டங்கள் அதற்குரிய சோதனைக்களங்கள் எல்லாம் உலகளாவிய அளவில் வாங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு அறிக்கை வெளியீட்டு இருப்பது பாராட்டிற்குரியது என்றார்.
சமகாலத்தில் கீழடி எனும் பெயர்
கீழடியில் தற்போது தொடங்கப்பட்டிருக்கக்கூடிய கண்காட்சி காணொளியில் பார்த்தேன், மக்கள் ஆர்வமாக அங்கு வருகிறார்கள். ஒரு நாளைக்கு 5000 பேருக்கு மேல் வருவதாக கேள்விப்பட்டேன் என்றார். மேலும், தன்னுடைய முகநூல் நட்பில் அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கக்கூடிய என்னுடைய நண்பர்கள் எல்லாம் தங்களுடைய குழந்தைகளுக்கு ஆதன் பெயரை என்னிடம் வைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் அப்படி 40 பேருக்கும் மேல் பெயர் வைத்திருக்கிறேன் என்றார். ஆதன் பெயர் கீழடியில் உள்ள மண்பாண்டகளில், சங்க இலக்கியத்தில் எழுதி இருக்கிறது ஆனால் இன்று சமகாலத்தில் வாழக்கூடிய தமிழ் குழந்தைகளுக்கும் அந்த பெயரை வைக்கிறார்கள் என்று பெருமையாக கூறினார்.
மேலும் படிக்க | விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க தடை - நீதிமன்றம்
மேலும், அமெரிக்காவிலிருந்து வந்து கீழடியில் ஒரு கைப்பிடி மண் எடுத்து செல்கிறார்கள். அந்த நிலத்தின் உரிமையாளர் ஒரு அம்மா என்னிடம் சொன்னார் என் நிலத்தை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியது பெருமையாக இருப்பதாக கூறினார். பொதுமக்கள் தங்களுடைய வரலாறு தனக்கானது என்று நினைக்காமல் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும், தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழக மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.