திரைத்துறையில் யுவனின் 26 வருடம்...இணையத்தில் வைரலாகும் ஹேஸ்டேக்...!

திரைத்துறையில் யுவனின் 26 வருடம்...இணையத்தில் வைரலாகும் ஹேஸ்டேக்...!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரைத்துறையில் கால் பதித்து இன்றுடன் 26 வருடம் ஆகிவிட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அனைவரையும் தனது பாடலால் கட்டிப்போட்டவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா...இவரின் பாடலை கேட்காதோர் என்று யவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது இசையால் கட்டி அணைத்தவர். இவரின் பாடல்கள் காதல் செய்பவர்களுக்கு புத்துணர்ச்சியாகவும், காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மருந்தாகவும் யுவனின் இசை அமையும் என்றால் அது மிகையாகாது.

இதையும் படிக்க : இன்றுடன் நிறைவடைகிறதா ? மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ? - மின்சாரத்துறை அமைச்சர் ஆலோசனை

90's காலகட்டத்தில் யுவனின் இசையும் பாடல்களும் கொடி கட்டி பறந்தன, குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஓ சென்யூரிட்டா, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல், இதுவரை இல்லாத உறவுகள், என யுவனின் ஹிட்ஸ்களில் இப்படி பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்...தற்போது வரையிலும் யுவனின் பாடல்கள் பலரால் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

இவை அனைத்துக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, திரைத்துறையில் கால் பதித்து இன்றுடன் 26 வருடம் ஆகிவிட்டது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக #26YearsOfYuvanism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றன.