ஆயுத கையிருப்பு இன்றி தவிக்கிறதா அமெரிக்கா...அமெரிக்காவின் பாதுகாப்பு?!!

ஆயுத கையிருப்பு இன்றி தவிக்கிறதா அமெரிக்கா...அமெரிக்காவின் பாதுகாப்பு?!!

ஜோ பைடன் நிர்வாகம் கடந்த ஒன்பது மாதங்களில் உக்ரைனுக்கு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அனுப்பியுள்ளது.  இது அமெரிக்காவை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

ஆயுத பற்றாக்குறை:

ஜோ பைடன் நிர்வாகம் கடந்த ஒன்பது மாதங்களில் உக்ரைனுக்கு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அனுப்பியுள்ளது. இது அமெரிக்காவை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.  தற்போது அமெரிக்காவில் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை வழங்கும் அமெரிக்கா:

இரண்டு தசாப்தங்களில் அமெரிக்கா நேரடியாக போரில் ஈடுபடாதது இதுவே முதல் முறை என பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட்டதில் இருந்து, போர் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதில் மட்டுமே அமெரிக்கா பங்கு வகிக்கிறது.  

ஆயுத பற்றாக்குறை காரணம்:

போரில் நேரடி பங்கேற்பு இல்லாததால், அமெரிக்காவில் ஆயுத உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது.  இதுவே இந்த பற்றாக்குறைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகள் கூறும் போது அமெரிக்கா அவசரகால கையிருப்பை வைத்துக்கொண்டு தான் மீதமான  ஆயுதங்களை மட்டுமே உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது எனக் கூறியுள்ளனர்.  அதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பழங்குடியினருக்கான தேவைகளை நிறைவேற்றுமா பாஜக?!!!