மத வெறுப்பை ஏற்படுத்தியர் உயர்நீதிமன்ற நீதிபதியா?!!

மத வெறுப்பை ஏற்படுத்தியர் உயர்நீதிமன்ற நீதிபதியா?!!
Published on
Updated on
1 min read

இந்திய மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்பை மூட்டும் விதத்தில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான பேச்சுக்களை பேசி வந்த பாஜக நிர்வாகி, விக்டோரியா கெளரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

நம்பிக்கை தகர்ப்பு:

இந்த நியமயன நடவடிக்கை நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பாதித்துள்ளது.  நீதிபதியாக செயல்படுவோர் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டிருக்கலாம்.  ஆனால் அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமாக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர், அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களை காக்க செயல்படுவாரா? என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நியாயமான கோபம்:

மேலும், கொலீஜியம் முடிவிற்கு எதிராக வழக்கறிஞர்களும், அரசியல் கட்சிகளும் கொந்தளித்தது நியாயமானது.  தற்போது உச்ச நீதிமன்றம் இது பற்றிய வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.  ஆனால் இந்த நிலையில் பாஜக ஒன்றிய அரசு முந்திக்கொண்டு நியமனத்தை‌ உறுதி செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.

ரத்து செய்ய வேண்டும்:

எனவே, பிரச்சனையின் தீவிரத்தை கணக்கில் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த நியமனத்தை‌ ரத்துச் செய்து நீதித்துறையின் மாண்பினை பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com