முதலமைச்சருக்கு வாழ்த்துக்கு மட்டும் மொழி தேவைப்படுகிறதா? - தமிழிசை கேள்வி

முதலமைச்சருக்கு வாழ்த்துக்கு மட்டும் மொழி தேவைப்படுகிறதா? - தமிழிசை கேள்வி

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் குலக்கல்வி திட்டம் என்ற தவறான சித்தரிப்போடு எடுத்துச் செல்லப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிகே மூப்பனாரின் 22 ஆவது நினைவு நாளில் அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதையும் படிக்க : "எம்.ஜி. ஆர் சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்கவே திமுகவின் காலை உணவுத்திட்டம்" ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

அப்போது பேசிய அவர், பிரதமரின் தூய்மையான அரசியலுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் சிஏஜி அறிக்கையாக வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்துவதாக கூறினார். மேலும், விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் குலக்கல்வி திட்டம் என்ற தவறான சித்தரிப்போடு எடுத்துச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு,  வாழ்த்துக்கு மட்டும் ஒரு மொழி தேவைப்படுகிறது, வாழ்வாதாரத்திற்கு மொழி தேவைப்படவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.