”பதவி கிடைக்காததால் அதிருப்தி அடையவில்லை” என்று பாஜக தலைவர் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார். விரைவில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் தயாராகிறார். பாஜக மூத்த தலைவரான மறைந்த கோபிநாத் முண்டேவின் மகள் பீட் மாவட்டத்தில் உள்ள சன்வர்கான் காட்டில் பாரம்பரிய தசரா பேரணியில் உரையாற்றியுள்ளார்.
”போராட்டம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் கூட போராட வேண்டியிருந்தது. மறைந்த கோபிநாத் முண்டே தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் போராட வேண்டியிருந்தது.” என்று கூறியுள்ளார்.
”ஜனசங்க சித்தாந்தவாதியான தீன்தயாள் உபாத்யாயின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல தயாராக இருக்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் மக்களுக்காக உழைக்குமாறு எங்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிந்துகொள்க: குடும்ப அரசியலை எதிர்க்கும் கட்சியில் குடும்ப அரசியலா...!!!!
”மக்கள் அவர்களது தலைவருக்கு ஏதாவது கிடைக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதில் தவறில்லை.” எனவும் பங்கஜா முண்டா பேசியுள்ளார். 2019 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நான் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. ஆனால் எனக்கு எவ்விதமான அதிருப்தியும் இல்லை. இருப்பினும், தனது உறவினரும் என்சிபி தலைவருமான தனஞ்சய் முண்டே தன்னை கடந்த முறை தோற்கடித்த பார்லியில் மீண்டும் போட்டியிட விரும்புகிறேன்” என பங்கஜா முண்டா தெளிவுபடுத்தினார்.
கட்சி பொதுவானது:
”கட்சி அமைப்பு எந்த ஒரு தனி நபருக்கும் உரியது அல்ல. நான் யார் மீதும் அதிருப்தி அடையவில்லை. கட்சி எனக்கு வாய்ப்பு கொடுத்தால், 2024 தேர்தலுக்கு தயாராகி விடுவேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.