”தமிழ்ப்பெருமை பேசும் மோடி இந்தியை திணிக்கிறாரா?” நயினார் நாகேந்திரன் விளக்கம்!!!

”தமிழ்ப்பெருமை பேசும் மோடி இந்தியை திணிக்கிறாரா?” நயினார் நாகேந்திரன் விளக்கம்!!!

சிரிப்பலையில் தொடங்கிய உரை:

சட்ட பேரவையில் ’மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு’ என உரையை தொடங்கி சிறிது நேரம் அமைதி காத்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் திமிழிலேயே தொடருங்கள் என கிண்டலாக கூறினார் சபாநாயகர் அப்பாவு.  இதனைத் தொடர்ந்து அவையில் சிரிப்பலை எழுந்தது.  தமிழில் தான் பேசப் போகிறேன் எனக்கூறி பேச்சைத் தொடர்ந்தார் நாகேந்திரன்.

பாஜக எதிர்க்கும்:

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்க்குண்டு.. அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் நாம் அனைவருக்கும்..” என உரையை தொடங்கிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பு இருக்கமானால் நிச்சயமாக அதை பாஜக எதிர்க்கும் எனக் கூறினார்.  

தமிழை போற்றும் மோடி:

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபை சென்றாலும் சரி அயோத்தி சென்றாலும் சரி திருக்குறளையும் பேசுவார் தமிழ் வளர்த்த புலவர்களையும் பேசுவார் எனக் கூறினார்.  

மேலும் பனாரஸ் பல்கலைக்கழகத்தில்  தமிழுக்கென தனி இருக்கை பெற்று தந்தவர் பாரத பிரதமர் மோடி எனக் கூறிய நாகேந்திரன் இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை எனவும் சேர்த்து கொண்டார்.

’சி’ பிரிவு மாநிலங்கள்:

மேலும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுகிறது என்றத் தவறான கருத்து பரப்பபடுகிறது எனவும் தெரிவித்தார்.  கடந்த மாதம் 9ம் தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் ‘சி’ பிரிவு மாநிலங்களில் அதாவது ஹிந்தி பேசப்படாத மாநிலங்களில் தாய்மொழி கல்வி நடைமுறையில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார் நாகேந்திரன். 

அனைத்து மாநிலங்களிலும்...:

அதைத் தவிர அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற விதிகளும் நீதிமன்ற தீர்ப்புகளும் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி கூறியதை இங்கு குறிப்பிட்டு கூறினார்.

எந்த வகையில் இழுக்கு?:

இவ்வாறு இருக்கும் போது அவர்களால் நம் தாய்மொழி தமிழுக்கு எவ்வாறு இழுக்கு வர முடியும் எனக் கூற முடியும் எனக் கேள்வியெழுப்பினார்.

ஆங்கிலத்தில்:

தமிழ்நாட்டில் படித்த மாணவர் உத்திரபிரதேசத்தில் சென்று ஹிந்தியிலா படிக்க முடியும் என அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஆங்கிலத்தில் படிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என பதிலளித்தார்  நயினார் நாகேந்திரன்.

அவை வெளியேற்றம்:

இவ்வாறு பல வகையிலும் யோசித்து செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க முடியாது எனக் கூறி அவையை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார் நாகேந்திரன். 

                                                                                                        -நப்பசலையார்

இதையும் படிக்க:   அரசியல் ரீதியாக செயல்படுகிறார் சபாநாயகர்...!ஈபிஎஸ் ஆவேசம்...!