சர்வதேச மின்சார வாகன மாநாடு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு!!

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்தித்த பொழுது, " இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி ஆகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களில் சுமார் 4 லட்சத்து 10 ஆயிரம் மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் 10,44,600 மின்சார வாகனங்கள் இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம், ஆகிய 6 நகரங்களில் மின்சார வாகன மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கண்ட முயற்சி பண்ணலாக உற்பத்தி தற்போது அதிகரித்திருக்கிறது" என கூறியுள்ளார்.

மேலும், நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதி தீர்ப்பு" அமைச்சர் துரைமுருகன்!!