அமெரிக்காவிலிருந்து சரியான நேரத்தில் பெறப்பட்ட தகவலால் மும்பை இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை!!!

அமெரிக்காவிலிருந்து சரியான நேரத்தில் பெறப்பட்ட தகவலால் மும்பை இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை!!!
Published on
Updated on
1 min read

ஐபி முகவரி மற்றும் இருப்பிடம் போன்ற முக்கிய தகவல்களின் அடிப்படையில் மும்பை போலீசார் இளைஞரை அடையாளம் கண்டுள்ளனர்.   தகவல் கிடைத்ததும் போலீசார் அவரை தற்கொலையில் இருந்து காப்பாற்றியது மட்டுமின்றி அறிவுரையும் அளித்தனர்.

அமெரிக்காவிலிருந்து:

மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வலி இல்லாமல் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று கூகுளில் தேடிக்கொண்டிருந்தார்.  இது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் டெல்லியில் உள்ள இன்டர்போல் அதிகாரியை எச்சரித்ததுடன் மும்பை காவல்துறையிடம் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.  அதன்பேரில் போலீசார் அந்த வாலிபரை கண்டுபிடித்து தற்கொலை செய்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

காரணம் என்ன?:

மும்பை குர்லா பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.  தகவல் கிடைத்ததும் போலீசார் அவரை தற்கொலையில் இருந்து காப்பாற்றியது மட்டுமின்றி அறிவுரையும் அளித்துள்ளனர்.  கல்வி மற்றும் இதர தேவைகளுக்காக தற்கொலைக்கு முயற்சி செய்த இளைஞர் பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.  

அவரால் வீட்டுக்கடனின் தவணையை கூட கட்ட முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து மன உளைச்சலில் இருந்ததால் தான் வலியின்றி தற்கொலை செய்யும் முறையை ஆன்லைனில் தேடிக்கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.  

சரியான நேரத்தில் பெறப்பட்ட தகவலினாலும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டதாலும் அந்த இளைஞரை காப்பாற்ற முடிந்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com