உலகின் மிக மோசமான காற்றைக் கொண்ட நகரமாக லாகூர் மாறியுள்ளதாக சுவிஸ் காற்று சுத்திகரிப்பு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் மாசின் அளவு 2 புள்ளி 5 என்ற அளவில் இருந்தால் நுரையீரலை பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் காற்றின் தரம் 2021 இல் 86.5-ஆக இருந்த நிலையில் தற்போது 97.4 மைக்ரோகிராம் அளவிற்கு மோசமடைந்ததுள்ளது.
இதனால் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மாறியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக டெல்லியின் புறநகரில் உள்ள பிவாடியில் மாசு அளவு 92.7 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இபிஎஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு... கண்டன ஆர்ப்பாட்டம்!!