மறைக்கப்பட்ட பசியில் முன்னிலையில் இந்தியா!!! கவனிக்குமா மத்திய அரசு!!

மறைக்கப்பட்ட பசியில் முன்னிலையில் இந்தியா!!! கவனிக்குமா மத்திய அரசு!!

தனியொருவருக்கு உணவில்லையேல் ஜகத்தினையே அழித்திடுவோம்” எனப் பாடினார் பாரதி.  தற்போது உணவு பற்றாக்குறியினால் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

மறைக்கப்பட்ட பசி:

ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்கு  சமச்சீர் உணவு மிகவும் அடிப்படையான ஒன்று. ஆனால் தற்போது இந்தியா சமச்சீர் உணவு தொடர்பான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதை மருத்துவ நிபுணர்கள் மறைக்கப்பட்ட பசி என்று குறிப்பிட்டுள்ளனர். 

முன்னணி நாடு:

நாட்டின் பெரும்பாலான குடும்பங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. அதன் மோசமான அளவில் கர்ப்பிணிப் பெண்களையே தாக்குகிறது.  பிறக்கும் குழந்தைகளில் இந்த குறைபாடு ஏற்படுத்தும் ஆபத்து பன்மடங்கு உள்ளது.  லான்செட் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், மறைக்கப்பட்ட பசியுடன் உலகின் முன்னணியில் இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று நிபுணர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். 

பசி:

இங்குள்ள 'பசி' என்ற சொல் உணவின் மீதான ஏக்கத்தையும் அதன் பற்றாக்குறையால் ஏற்படும் துயரத்தையும் குறிக்கிறது என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 

ஊட்டச்சத்து குறைபாடு:

இரும்பு, அயோடின் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டப்பொருள்கள் தவிர, வைட்டமின் ஏ, வைட்டமின்-டி, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவற்றின் குறைபாடு மிக அதிகமாக மக்களிடம் காணப்படுவதாகக் இந்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

விளைவுகள்:

இந்த குறைபாட்டின் காரணமாக இரத்த சோகை, கர்ப்பம் மற்றும் கருப்பையில் உள்ள கருவின் மூளை வளர்ச்சியில் ஆழமான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இந்தியாவில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அனைத்து பருவ வயது மற்றும் குழந்தை பிறக்கும் பெண்களுக்கு போதுமான இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் கிடைப்பதை உறுதி செய்ய இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் . அதனால் இந்தியாவில் உள்ள நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை விரைவில் நீக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அரசு கவனிக்குமா?:

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வைட்டமின் நிறைந்த உணவை நிறைவாக கொடுக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரு விரிவான உத்தி வகுக்கப்பட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும், ஊட்டச்சத்து குறைபாடு மக்களிடம் இருந்து அகற்றப்படாமல் இருப்பது கவலைக்குரிய விஷயம்.  மறைந்திருக்கும் பட்டினியை நாடு முழுமைக்கும் முடிவுக்கு கொண்டுவருவது அவசியம்.

புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன!!:

  • நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2.60 கோடி கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்தின் போது இரத்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.   ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகையால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கான காரணமாகும்.
  • 2018 ஆம் ஆண்டில், இரும்பு-வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக இரத்த சோகை ஏற்பட்டு இந்தியாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகப்பேறு இறப்புகள் பதிவாகியுள்ளன.