இந்தியாவில் அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!!

இந்தியாவில் அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!!

இந்தியாவில் வெள்ளிக்கிழமை புதிதாக 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது.  

இந்தியாவில் வெள்ளிக்கிழமை புதிதாக 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3,609 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,78,158 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த வகையில், நாட்டில் இதுவரை 5,30,699 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின் படி, நாட்டில் தினசரி கொரோனா தொற்று விகிதம் 0.11 சதவீதம் எனவும் வாராந்திர தொற்று விகிதம் 0.16 சதவீதமாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்படுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 2,13,080 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளதோடு சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மொத்த வழக்குகளில் 0.01 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   சமாதானமாக மறுத்த மம்தா பானர்ஜி....எதற்காக பாஜகவினரின் இந்த சமாதான முயற்சி?!!