அரசு விதிமுறைகளுக்கு முரணாக நாட்டு வெடிக்கடை வெடிமருந்து கடைகளில் ஆய்வு...

அரசு விதிமுறைகளுக்கு முரணாக நாட்டு  வெடிக்கடை  வெடிமருந்து கடைகளில் ஆய்வு...
Published on
Updated on
1 min read

வலங்கைமான் பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் நாட்டு வெடிக்கடைகள்… வெடிமருந்து வைக்கப்பட்டுள்ள கிடங்கு பகுதிகள், வெடி தயாரிக்கும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு.


பட்டாசுக்கு பெயர் பெற்ற சிவகாசிக்கு அடுத்தபடியாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் வீட்டுக்கு வீடு வெடி  குடிசை தொழிலாக வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய  வெடிதயாரிப்பில் அரசு உரிமம் இல்லாமல் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் ஈடுபடுவதோடு அரசின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக ஆபத்தை உணராமல் வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால் அக்கம் பக்கத்தினர் உயிர் பயத்தோடு வாழ்ந்து வருகின்றனர். மேலும் அரசு விதிமுறைகளுக்கு முரணாக வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக  வலங்கைமான் பகுதி மக்கள் அரசு உயர் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தனர்.   மேலும் தற்போது கோடை காலமாக இருப்பதால் வலங்கைமான் பகுதியில் அளவுக்கு அதிகமாக இருந்து வரும் வெடிமருந்துகளால் ஏற்படும் வீபரீதத்தை கருத்தில் கொண்டு உரிய ஆய்வு நடத்தி   வெடிமருந்துகளை பறிமுதல் செய்து பொதுமக்களின் உயிருக்கு  உத்தரவாதம் அளித்திட அரசுஅதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் வலியுறுத்தினர்.

இதன் அடிப்படையில் தீயணைப்புதுறை மாவட்ட அதிகாரிகள் உத்தரவின் பேரில் தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர்  ராஜேஸ்  தலைமையில் வருவாய் துறையினர்,  காவல் துறையினரின் முன்னிலையில் வலங்கைமான் பகுதியில் உள்ள வெடிக்கடைகள்,  வெடிமருந்து வைக்கப்பட்டுள்ள கிடங்கு பகுதிகள், வெடி தயாரிக்கும் வீடுகள் என பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com