மதுரையில், உணவுப் பொட்டலத்தில் பிளேடு துண்டு!

மதுரையில், உணவுப் பொட்டலத்தில் பிளேடு துண்டு!
Published on
Updated on
1 min read

மதுரை: மதுரையில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட உணவில் பிளேடு துண்டு இருந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள கெளரி கங்கா உணவகத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றை வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து பார்த்தபொழுது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 

பார்சலில் இருந்த சாதத்தில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடைப்பதைக் கண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று கடையில் வேலை பார்த்த ஊழியர் ஞானம் என்பவரிடம் கேட்ட போது அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முகமது உணவுப் பாதுகாப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படாமல் இருந்துள்ளது.  மேலும் பணியாளர்களிடம் மருத்துவசான்று, தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக்கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக்கொடுத்துள்ளது. மேலும் உணவுப்பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மதுரையில் மதிய உணவிற்கு ஆர்டர் செய்த உணவில் பிளேடு துண்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com