இந்தியாவில் பாதிக்கப்பட்ட இறக்குமதியும் ஏற்றுமதியும்.... வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள்!!!

இந்தியாவில் பாதிக்கப்பட்ட இறக்குமதியும் ஏற்றுமதியும்.... வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள்!!!

இந்தியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்த சமீபத்திய புள்ளி விவரங்கள் வர்த்தக அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி:

கடந்த ஆண்டு இதே மாதத்தில் 35.23 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஜனவரியில் 6.58 சதவீதம் குறைந்து 32.91 பில்லியன் டாலராக மாறியுள்ளது என்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.  ஜனவரியில் வர்த்தக பற்றாக்குறை 17.75 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி:

இறக்குமதியும் ஜனவரியில் 3.63 சதவீதம் குறைந்து 50.66 பில்லியன் டாலராக மாறியுள்ளது.  இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 52.6 பில்லியன் டாலராக இருந்தது என்பது அறிக்கையின் மூலம் தெரிகிறது.

நிதியாண்டில்:

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி காலத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 8.51 சதவீதம் அதிகரித்து 369.25 பில்லியன் டாலராக உள்ளது.   அதே நேரத்தில்  இறக்குமதி 21.89 சதவீதம் அதிகரித்து 602  பில்லியன் டாலராக இருந்தது என்பது தரவுகளின் மூலம் தெரிகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பெண்களே ஒன்றிணைவோம்.... இலங்கையில் கவன ஈர்ப்பு பேரணி!!