”நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சந்தேகமின்றி வெற்றிபெறும்” - முதலமைச்சர் ஸ்டாலின்

”நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சந்தேகமின்றி வெற்றிபெறும்” - முதலமைச்சர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா எதிர்கட்சிகள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியினரின் 3வது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணி பிரிந்து விடும் என பாஜக எதிர்பார்த்ததை முறியடித்து வெற்றிப்பாதையில் இந்தியா எதிர்கட்சிகள் பயணித்து வருவதாக குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே முழுமுதற் நோக்கம் எனவும், அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டை சீரழித்த பா.ஜ.கவை வீழ்த்துவற்கான உரிய காரணங்களை நாட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான அறிக்கையாக அது அமைய வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com