IAS அதிகாரி பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜர் ..!

Published on
Updated on
1 min read

பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜரானார். 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் சிவலிங்கம் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றினார்.

இவருடைய பனிக்காலத்தை பணி நிரந்தரம் செய்து பணி வரன்முறை செய்யக் கூடிய வழக்கில் பல வருடங்களாக பதில் அறிக்கை தாக்கல் செய்யாததால் நீதிபதி பட்டு தேவானந்த் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார் நேரில் வராததால் இயக்குனருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி மீண்டும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில்  ஐஏஎஸ் அதிகாரி ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா நீதிபதி பட்டு தேவானந் முன்பு ஆஜராகினார்.

நீதிபதி முன் ஆஜரான ஐஏஎஸ் அதிகாரிக்கு மூத்த வழக்கறிஞர்  ஆஜராகி பல்வேறு நிகழ்வுகள் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றுவதாகவும் இந்த வழக்கில் பதில் அளிக்க அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் ஐஏஎஸ் அதிகாரிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு என வேண்டுகோள் வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கில் நீதிமன்றம் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு பல வருடங்களாக ஆனதால் நீதிமன்ற மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது இந்த அபராத தொகையை தனியார் முதியோர் இல்லத்திற்கு வழங்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com