நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சியில் தலைமை அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், வாழ்த்துவதாகவும் கூறினார். அதே நேரத்தில் , எம்ஜியாருக்கு பிறகு வந்த நடிகர்கள் யாரும் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை என்றார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தமிழ்நாட்டு மக்களை நம்பி தனித்தே தேர்தலில் களமிறங்குவதாகவும் சீமான் தெரிவித்தார்.
சுதந்திர போராட்டத் தியாகி சங்கரய்யா யார் என்றே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரியாது எனவும், அவரிடம் கையெழுத்து பெறுவதற்கு பதிலாக, தமிழ்நாடு அரசு தனியாக ஒரு பாரட்டு விழா நடத்தலாம் எனவும் கூறினார்.