கடந்த காலத்திற்கு சென்று நிகழ்காலத்துக்கு வந்திருக்கேன் -  வைரமுத்து

கடந்த காலத்திற்கு சென்று நிகழ்காலத்துக்கு வந்திருக்கேன் - வைரமுத்து

Published on

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்த நாளையொட்டி "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கின்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் முதலமைச்சரின்  புகைப்பட கண்காட்சியினை பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய  கவிஞர் வைரமுத்து

பணி நெருக்கடியின் காரணமாக இக்கண்காட்சியினை பார்க்க முடியாதோ என்ற எண்ணத்தை உடைத்து கண்காட்சிகனை பார்ப்பதற்கான நல்வாய்ப்பை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு நன்றி. இப்புகைப்பட கண்காட்சி ஒளி கொண்டு எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு. வாழ்வியல் அமைந்தது வரலாறு அமைந்தது அதற்கான பதிவுகள் அமைந்தது எல்லாம் தளபதிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.

70 ஆண்டு கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்ததாகத்தான் இந்த புகைப்பட கண்காட்சியை நான் பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் இதுவரை கடந்து வந்த அரசியல் பொது வாழ்க்கையை எழுத்தால் பதிவு செய்திருக்கும் "உங்களில் ஒருவன்' நூலினை ஒளி வடிவில் பார்ப்பதற்கு இப்புகைப்பட கண்காட்சி சரியாக இருக்கும். கடந்த காலத்துக்குள் சென்று நிகழ்காலத்துக்கு வந்ததாக இப்படகண்காட்சியினை பார்க்கும்போது எனக்கு தோன்றியது.
இந்த வரலாறு என்பது  எல்லா தலைவர்களுக்கும் அமையாது.

கண்காட்சியில் உள்ள சிறைக்கூடத்தை பார்க்கும் பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன் என்றும்  இம்முழுகண்காட்சியினை பார்த்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள மதிப்பு மேலும் கூடுகிறது.என்றும்இந்த புகைப்பட கண்காட்சியில் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தபோது அவர் காதோடு முதலமைச்சர் பேசுவதற்காக முயற்சி செய்கிறார் அந்த புகைப்படம் எனக்கு  மிகப்பெரிய நெகழ்ச்சியை தந்திருக்கிறது என தெரிவித்தார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com