பாஜக காங்கிரஸின் தேர்தல் செலவு இத்தனை கோடியா?

பாஜக காங்கிரஸின் தேர்தல் செலவு இத்தனை கோடியா?

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள், குறிப் பிட்ட காலக்கெடுவுக்குள், தேர்தல் செலவின அறிக்கையை, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். 

பாஜக- காங்கிரஸ்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக ரூ.340 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உ. பி.யில்தான் அக்கட்சி அதிக செலவு செய்ததாக தெரிகிறது.  அதே நேரத்தில், இந்த மாநிலங்களில் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் 194 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

தேர்தல் செலவு அறிக்கை:

இரு பிரதான கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறித்த அறிக்கையில் மேற்கூறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரத்திற்காக மொத்தம் 340 கோடிகள் செலவு செய்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. 

பாஜக தேர்தல் செலவு:

பாஜகவின் தேர்தல் செலவு அறிக்கையின்படி, அதிகபட்சமாக உ. பி.யில் ரூ.221 கோடியும், மணிப்பூரில் ரூ.23 கோடியும், உத்தரகாண்டில் ரூ.43.67 கோடியும், பஞ்சா பில் ரூ.36 கோடிக்கும் அதிகமாகவும், கோவாவில் ரூ.19 கோடியும் செலவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

இதேபோல், காங்கிரஸ் தாக்கல் செய்த அறிக்கையில், மேற்கண்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ரூ.194 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இடம் கிடைக்குமா?!!