இந்தியாவை உலுக்கிய கோர ரயில் விபத்துகள்!!!!!

இந்தியாவை உலுக்கிய கோர ரயில் விபத்துகள்!!!!!
Published on
Updated on
2 min read

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில், இதுவரை 238 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதற்கு முன்னர் நிகழ்ந்த கோர ரயில் விபத்துக்கள் பற்றி விவரங்கள் ...

சூறாவளியில் சிக்கிய பாம்பன் - தனுஷ்கோடி ரயில்

1964ம் அண்டு, டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று பாம்பன்-தனுஸ்கோடி பயணிகள் ரயில் ஒன்று அப்போது வீசிய சூறாவளியில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 126 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று பீகார் மாநிலத்தில் மான்சி மற்றும் சகார்சா இடையே சுமார் 800க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் ஒன்று பாக்மதி எனும் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் மீட்பு பணிகளில் ஏற்பட்ட தோய்வு காரணமாக சுமார் 750க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 

1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ல் புருஷோத்தம் ரயில் விபத்து 

1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி புது டெல்லியிலிருந்து பூரி சென்றுக்கொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் சுமார் 305 பயணிகள் வரை உயிரிழந்தனர். 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்கத்தாவிலிருந்து ஜம்மு நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயில் ஏற்கெனவே தடம் புரண்டு இருந்த ஃபிராண்டியர் கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலின் பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர். 

1999 ஆகஸ்ட் மாதம் 2ம் தேதியன்று மேற்கு வங்கத்தின் கைசல் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது, பிரம்மபுத்திரா மெயில் மோதியது. இதில் 285 பேர் உயிரிழந்தனர். 2002ம் ஆண்டு ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்சில் தாவே ஆற்றின் பாலத்தின் மீது தடம் புரண்டதில் 140 பேர் உயிரிழந்தனர். இது ஒரு சதி செயல் என்றும், இதற்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்றும் பின்னர் தெரிய வந்தது.

ஜார்கிராம் அருகே தடம் புரண்டு கோரவிபத்து 

அதன் பின்னர் 8 ஆண்டுகள் வரை வேறு எந்த கோர விபத்தும் பதிவாகவில்லை. ஆனால் 2010ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதியன்று மும்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ், ஜார்கிராம் அருகே தடம் புரண்டு எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 148 பேர் உயிரிழந்தனர்.  2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள புக்ராயனில், இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 260 பேர் உயிரிழந்தனர்.

அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா

1956 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி அரியலூரில் நிகழ்ந்த விபத்தில் 250 பேர் உயிரிழந்தனர். அதற்க தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகாக ரயில் விபத்துகளுக்கு எந்த அமைச்சரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com