விநாயகர் ஊர்வலத்தில் ஆடிய நபரை, வெறிகொண்டு தாக்கிய இந்து முன்னனியினர்!!

ஊர்வலத்தில் ஆடிய நபரை, இந்து முன்னணியினர் கன்னத்தில் அறைந்து காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகரை சுற்றி வைக்கப்படிருந்த 42 விநாயகர் சிலைகள வாகனங்களில் எடுத்து வரப்பட்டு முருகன் கோவில் வாசலில் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. கோவில் முன்பு  இந்து முன்னணி,  பாஜக நிர்வாகிகள் கொடியசைத்து விநாயகர் ஊர்வலத்தை  துவக்கி வைத்தனர்.

ஊர்வலம் துவங்குவதற்கு முன்பாக பல்வேறு பகுதிகளிலிருந்து  வரும்  விநாயகர் முன் அந்தந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக விநாயகரை அழைத்து வந்தனர்.

இந்நிலையில் மேடை முன்புறத்தில் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடிய நபரை இந்து முன்னணி நிர்வாகிகள்  கன்னத்தில் அறைந்தும் காலால்  மிதித்தும் தாக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாக்கப்படும் நபர் அடி தாங்க முடியாமல், நிலைகுலைந்து  அங்கேயே கீழே விழுகிறார்.

வலைதளங்களில் வைரலாக பரவும் இந்த  வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் விநாயகர் ஊர்வலத்திற்கு பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்த போதும் இச்சம்பவத்தை யாரும் கண்டு கொள்ளாது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com