டிசம்பர் 8...13 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை...உங்க மாவட்டம் இருக்கான்னு பார்த்துக்கோங்க!

டிசம்பர் 8...13 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை...உங்க மாவட்டம் இருக்கான்னு பார்த்துக்கோங்க!

வங்கக்கடல் பகுதியில் வரும் 8ம் தேதி உருவாகவுள்ள புயலால், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு:

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் 8ம் தேதி தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வந்தடையும் எனவும், இதன் காரணமாக இன்றும் நாளையும் மிதமான மழையும், நாளை மறுநாள்  தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பொழிய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலம் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: விறுவிறு குஜராத் தேர்தல்...ஜனநாயகக்கடமை ஆற்றிய பிரதமர்!

புயல் காரணமாக வரும் 8ம் தேதி சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அன்றைய தினம், தமிழகம்  மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.