”அவர் நிச்சயம் நிறுத்துவார்” உக்ரன் அதிபருக்கு நம்பிக்கை அளித்த பிரெஞ்சு அதிபர்

”அவர் நிச்சயம் நிறுத்துவார்”  உக்ரன் அதிபருக்கு நம்பிக்கை அளித்த பிரெஞ்சு அதிபர்

உக்ரைன் போர்:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு உலகின் பெரும்பாலான மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை அதிக அளவில் பாதித்ததாக தெரிகிறது. கிரெம்ளின் படைகள் படையெடுப்பைத் தொடங்கிய நாளில், மக்ரோனுக்கும்,  உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையே நடந்த தனிப்பட்ட தொலைபேசி அழைப்பின் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ நடவடிக்கை:

விளாடிமிர் புதின் அவரது பல்லாயிரக்கணக்கானபடைவீரர்களை உக்ரைனுக்குள் "சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு" என அனுப்பிய பிறகு, இரு தலைவர்களும் உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் நகர்வைப் பற்றி விவாதிப்பதை 42 வினாடிகள் கொண்ட வீடியோ காட்டுவதாக உள்ளது.  

பரப்பரப்பான வீடியோ:

இந்த வீடியோவை ஜிம்மி என்ற ட்விட்டர் பயனாளர் வெளியிட்டுள்ளார். அவர் பதிவில், "உக்ரைன் மீதான முழு அளவிலான ரஷ்ய தாக்குதலின் அளவு தெளிவாகத் தெரிய வந்தபோது, ​​படையெடுப்பு நடந்த காலை வேளையில், மக்ரோன் ஜெலென்ஸ்கியுடன் பேசிய சில அழகான நம்பமுடியாத காட்சிகள்." எனத் தலைப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜிம்மி.

தொலைபேசி உரையாடல்:

இந்த வீடியோவில், உக்ரைன்அதிபர் மக்ரோனிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கவும் போரைத் தவிர்க்கவும் வலியுறுத்துவதைக் கேட்க முடிகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி அழைப்பில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் , "அப்படியானால், அவர்கள் கியேவில் எல்லா இடங்களிலும் சிறப்புப் படைகளை அனுப்பினார்கள் என்று அர்த்தமா? என்று கேட்கிறார்.  அதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி , " கியேவில், ஒடேசாவில் மற்றும் பெலாரஸில் இருந்து எல்லா இடங்களிலும். எனவே, நாங்கள் எங்கள் பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் போராடுகிறோம். எல்லா இடங்களிலும் படைகள் உள்ளன." என பதிலளித்துள்ளார்.  மேலும் ”இதை எங்களால் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு பயங்கரமாக உள்ளது” எனவும் கூறியுள்ளார்.

அதற்கு பிரெஞ்சு அதிபர் கவலையுடன்” இது முழுமையான யுத்தம் என்பது தெளிவாக தெரிகிறது” எனக் கூறியுள்ளார். "ஆம், இது பெரிய போர்" என்று அதிபர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

அதிர்ச்சியடைந்த மக்ரோன், "சரி, சரி" என்று பதிலளித்தார்.

ஜெலென்ஸ்கி "ஆம்" என்று பதிலளித்தார்.

ஜெலென்ஸ்கி தொடர்ந்து, "எனவே, இம்மானுவேல், நீங்கள் புதினுடன் பேசுவது மிகவும் முக்கியமானது மற்றும் போர் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது மிகவும் அவசியம் என்றும் நான் நினைக்கிறேன்.”என்று கேட்டார்.

”ஐரோப்பிய தலைவர்களும் புதினுடன் பேசி போரை நிறுத்த முடியும் என நினைக்கிறார்கள்.  அவரை அழைத்து போரை நிறுத்த அறிவுறுத்துவார்கள்” என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பதிலளித்தார்.

ஜெலென்ஸ்கி , "அவர் நிச்சயம் நிறுத்துவார். அவர் உங்கள் பேச்சைக் கேட்பார்."என்று பேசினார்.

ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போதிருந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர் மற்றும் ரஷ்யாவின் இடைவிடாத குண்டுவீச்சினால் நகரங்கள் இடிபாடுகளாக மாறிவிட்டன.

இதையும் படிக்க: பாஜகவுக்கு முற்றும் நெருக்கடி!!!மும்முனைத் தாக்குதலை சமாளிப்பாரா மோடி!!!