முதல் முறையாக சேலத்தில் ”ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி...ஆரவாரம் செய்த பொதுமக்கள்!

முதல் முறையாக சேலத்தில் ”ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி...ஆரவாரம் செய்த பொதுமக்கள்!
Published on
Updated on
1 min read

சேலத்தில் முதல் முறையாக நடைபெற்ற ”ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒவ்வொரு மாவட்டமாக ”ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் 6 நாட்கள் கடினமாக உழைக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி ஆரவாரம் செய்வதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

அந்த வகையில், சென்னை, கோவை, திருச்சியை தொடர்ந்து சேலத்தில் முதல் முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது டி.ஜே இசைக்கு ஏற்ப சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆடி மகிழ்ந்தனர்.

இதையடுத்து சருக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட தனித்திறமைகளை இளைஞர்கள் வெளிபடுத்தினர். அந்த சமயத்தில், டிஜே இசைக்கும் போது மின் கசிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com