நாடு முழுவதுமுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கேட் (GATE) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கணினி வழியிலான கேட் தேர்வு, இயந்திரவியல், கட்டடவியல் உட்பட 29 பாடப்பிரிவுகளில் நடத்தப்படும். இந்த கேட் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹால் டிக்கெட்டை https://gate.iitk.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 4 முதல் 12-ஆம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக காலை, மாலை என 2 வேளைகளில் நடைபெற உள்ளது. இந்த முறை தேர்வை கான்பூர் ஐஐடி நடத்தவுள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே...! இன்று உடல் நல்லடக்கம்...!