ஈச்சர் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குட்கா... டிரைவர் தலைமறைவு!!!

ஈச்சர் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குட்கா... டிரைவர் தலைமறைவு!!!
Published on
Updated on
1 min read

சூளகிரி அருகே ஈச்சர் வாகனத்தில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இரவு ரோந்து பணி:

சின்னார் அருகே போலீசார் இரவு ரோந்தின் போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  போலீசாரின் வாகன தணிக்கையின் போது தாறுமாறாக ஓட்டிவந்த ஈச்சர் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

தடைசெய்யப்பட்ட..:

அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி ஈச்சர் வாகனத்தில் குட்காவை கடத்தி வந்த சென்னப்பள்ளியை சேர்ந்த கிளினர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவு:

ஈச்சர் வாகனத்துடன் சேர்ந்து ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய வழக்கில் தலைமறைவான ஈச்சர் வாகன ஓட்டுநனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com