குஜராத் கலவரமும் செதல்வாட்டின் ஜாமீன் மனுவும்...!!!!!

குஜராத் கலவரமும் செதல்வாட்டின் ஜாமீன் மனுவும்...!!!!!
Published on
Updated on
1 min read

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும்  மத கலவரங்கள் தொடங்கின.  இந்த வன்முறை கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மோடி மீது குற்றச்சாட்டு:

வன்முறை நடைபெற்றபோது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர் பிரதமர் மோடி.  வன்முறையில் எம்.பி ஈசான் ஜாப்ரி உட்பட 69 காங்கிரஸ் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 64 பேர் குற்றம் சுமத்தப்பட்டது.  கலவரம் தொடர்பாக மோடி மீதும் வழக்கு தொடரப்பட்டது.

சிபிஐ விசாரணை:

மத கலவரம் தொடர்பான விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.  சிபிஐ விசாரணையில் மோடி உள்ளிட்டோரை குற்றமற்றவர்கள் என்க் கூறி விடுதலை செய்தது.

தீர்ப்பு எதிர் வழக்கு:

மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  

விடுவிப்பு சரியே:

இந்த வழக்கில் மோடி விடுதலை சரியே என தீர்ப்பு வழங்கப்பட்டது.  குஜராத் வன்முறையில் மோடியை சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்.

கைதும் நிராகரிப்பும்:

டீஸ்டாவுடன் இணைந்து முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமாரும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களின் கைது நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.  ஜாமீன் வழங்க கோரி மூன்று பேரும் தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றமும் குஜராத் அரசும்:

அகமதாபாத் நீதிமன்றம் மனுவை நிராகரித்ததை தொடர்ந்து டீஸ்டாவும் ஸ்ரீகுமாரும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.  மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 25க்குள் பதிலளிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.  

குஜராத் அரசு பதில் மனுவை அளித்தது.  அதில் டீஸ்டா குஜராத் கலவரத்தின் போது முக்கிய தலைவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் இது தொடர்பாக ஒரு அரசியல் தலைவரை சந்திது பெரும் தொகை வாங்கியதாகவும்தெரிவித்துள்ளது. 

ஜாமீன் கிடைக்குமா?:

டீஸ்டாவின் ஜாமீன் மனு இன்று தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அமர்வு விசாரணை செய்யவுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com