வாழ்த்துகள் இந்தியா...எதற்காக இந்த வாழ்த்து?!!!

வாழ்த்துகள் இந்தியா...எதற்காக இந்த வாழ்த்து?!!!

Published on

உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் இந்தியாவின் மூன்று புதிய கலாச்சார தளங்களை சேர்த்துள்ளது யுனெஸ்கோ.  

எவை எவை?:

மோதேராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சூரியக் கோயில், குஜராத்தின் வாட்நகர் நகரம் மற்றும் திரிபுராவின் உனகோட்டி மலைத்தொடரில் உள்ள பாறைச் சிற்பங்கள் ஆகியவை இதில் அடங்கும்.  

இந்தியாவிற்கு வாழ்த்துகள்:

நேற்று மாலை, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, மூன்று இடங்களின் படங்களையும் ஒரு ட்வீட் மூலம் பகிர்ந்துகொண்டு, ”வாழ்த்துகள் இந்தியா” என்று எழுதியுள்ளார்.  யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய கலாச்சார பாரம்பரியத்திற்கு ஊக்கமளிக்கும். 

ஊக்கமளிக்கும் நடவடிக்கை:

மறுபுறம், இந்திய தொல்லியல் துறையானது “இந்த நடவடிக்கை இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்கும்.” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com