விருதுநகர் மாவட்ட நகர்ப்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் ஓவியக் கலையில் ஆர்வமுடைய 100 மாணவ- மாணவிகளை தேர்ந்தெடுத்து ஓவியக் கலைஞர்கள் மூலம் அரசு சார்பில் இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவ- மாணவியரின் கைவண்ணத்தில் தீட்டப்பட்டு வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் ஆய்வு செய்து தொகுக்கப்பட்டு சிவகாசியில் நடைபெற்று வரும் கோடைகால தனியார் பொருட்காட்சியில் அரங்கு அமைத்து கண்காட்சி வாயிலாக பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
மாணவ- மாணவியரின் கோடைகால அழகோவிய கண்காட்சியை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையிலான அரசு அதிகாரிகளுடன், சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: கொலை வழக்கில் 5 ஆண்டிற்கு பின் வடமாநிலத்தவர் கைது...!!!